துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பின் தற்போது நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி படப்பிடிப்பிற்கு இடையே இந்த படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததால் படக்குழுவினர் அனைவரும் சோகத்தில் மூழ்கிவிட்டனர்.
தற்போது அந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, பிரியா பவானி சங்கர், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் நடிகர் அஜித் உடன் ஆரவ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா படத்தில் இருந்து விலகி கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முதல் கட்ட படப்பிடிப்பில் பணியாற்றிய நீரவ் ஷா தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. தற்போது நீரவ் ஷாவிற்கு பதிலாக ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் விடாமுயற்சி படப்பிடிப்பில் இணைந்து கொண்டார். நீரவ் ஷா படத்தில் இருந்து விலகியதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
INDvsSA: 8 ஆண்டு கால பெருமையை தக்க வைக்குமா இந்தியா?
சென்னை சர்வதேச திரைப்பட விழா: 126 படங்கள்… ரூ. 7 லட்சம் பரிசு!
LCU குறித்து லோகேஷின் ஷார்ட் ஃபிலிம்: நரேன் சொன்ன சர்ப்ரைஸ்!
IPL2024: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் இளம் மற்றும் மூத்த வயது வீரர்… எந்த நாடுன்னு பாருங்க!