2026–27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) ஞாயிற்றுக்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் காரணமாக இன்று BSE மற்றும் NSE பங்குச் சந்தைகள் ஞாயிற்றுக்கிழமையிலும் வழக்கமான வர்த்தக நேரத்தில் செயல்பட்டு வருகின்றன.
2026–27 பட்ஜெட் இளைஞர்களின் சக்தியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் எனக் கூறி தனது உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன், சுமார் ஒன்றரை மணி நேரம் பட்ஜெட்டை வாசித்து முடித்தார்.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் முடிந்ததைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
