மும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை மலாடு பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ஓர்லம் பிரின்டன் செரோவ். இவரது சகோதரி ஆன்லைனில் பட்டர்ஸ்காச் கோன் ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
இதை மருத்துவர் பிரின்டன் செரோவ் பாதிக்கு மேல் சாப்பிட்ட பின்னர் ஏதோ வித்தியாசமாக இருக்க, அந்த ஐஸ்கிரீமை பார்த்தபோது, அதில் 2 செ.மீ. நீளமுள்ள மனித விரல் ஒன்று இருந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், YUMMO ஐஸ்கிரீம் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து புகாரளித்துள்ளார். ஆனால், ஐஸ்கிரீம் நிறுவனத்திடம் இருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதையடுத்து, ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்தது தொடர்பாக மலாடு காவல் நிலையத்தில் மருத்துவர் புகாரளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்தது தொடர்பான புகார் குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “மேற்கு மலாடு பகுதியில் வசித்து வரும் மருத்துவர் ஓர்லம் பிரின்டன் செரோவ் என்பவர் ஆன்லைனில் YUMMO நிறுவனத்தின் பட்டர்ஸ்காச் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்துள்ளார்.
இதை அவர் மதிய உணவிற்கு பின்னர் சாப்பிட்டபோது அதில் மனித விரல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஐஸ்கிரீமில் இருந்த விரல் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் அறிக்கைகள் வெளியானதும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியா?: அன்புமணி பதில்!
குவைத் தீ விபத்து: 5 தமிழர்கள் உயிரிழப்பு? – அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்!