பியூட்டி டிப்ஸ்: அழகுக்கான கான்டாக்ட் லென்ஸ்… ஒளிந்திருக்கும் ஆபத்து!

Published On:

| By Kavi

சமீபத்தில் நடிகை ஒருவர், தான் அணிந்திருந்த கான்டாக்ட் லென்ஸால், தனக்கு கண்களில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், பார்வை சரியாகத் தெரியாமல் போனதாகவும், சிகிச்சையில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இன்று சாமானியர்களிடம் கான்டாக்ட் லென்ஸ் அணிகிற வழக்கம் அதிகரித்து வரும் நிலையில், நடிகை பகிர்ந்திருந்த விஷயம் அதிர்ச்சியளிக்கிறது.

ADVERTISEMENT

அப்படியானால் பார்வையை பாதிக்கும் அளவுக்கு அவை ஆபத்தானவையா? கண் மருத்துவர்கள் சொல்லும் பதில் என்ன?

“கண்ணாடி அணிய விரும்பாதவர்களுக்கும், கண்ணாடியைத் தவிர்க்க நினைப்போருக்கும் கான்டாக்ட் லென்ஸ் மிகச் சிறந்த ஆப்ஷன் என்பதில் சந்தேகமில்லை.

ADVERTISEMENT

அதே சமயம், அதில் சில மைனஸ் விஷயங்களும் உள்ளதை மறுப்பதற்கில்லை. கான்டாக்ட் லென்ஸ் அணிவது என முடிவு செய்துவிட்டால், அடிப்படையான சில விஷயங்களை அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும்.

லென்ஸை மிகச் சரியாக அணிய வேண்டும். உபயோகித்துக் கழற்றியதும் அவற்றுக்குண்டான பிரத்யேக திரவத்தில்தான் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். லென்ஸை அதற்குரிய கேஸில் (டப்பாவில்) தான் பத்திரப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

அந்த பாக்ஸானது முறையாகச் சுத்தப்படுத்தப்பட வேண்டும். இவற்றில் எதைச் செய்யத் தவறினாலும் இன்ஃபெக்ஷன் வரலாம். அந்த இன்ஃபெக்‌ஷனானது கண்கள் முழுவதும் பரவலாம்.

கான்டாக்ட் லென்ஸ் அணிவதில் உள்ள மிக முக்கியமான மைனஸ், அதனால் ஏற்படும் ‘ஹைப்பாக்ஸியா’ ( Hypoxia) பிரச்னை.

ஹைப்பாக்ஸியா என்பது ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிற நிலை. லென்ஸ் அணிவதால் கண்களுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம். இதன் விளைவாக, பார்வை மங்குதல், வலி, கண்களில் நீர் வடிதல், சிவந்துபோவது போன்ற பிரச்சினைகள் வரக்கூடும்.

கான்டாக்ட் லென்ஸ் அணிவோரில் ஆண்களைவிட பெண்களே அதிகம். அதனால், இந்தப் பிரச்னைகளையும் அவர்களே அதிகம் சந்திக்கிறார்கள். கான்டாக்ட் லென்ஸை அவசரமாகப் போட்டுக்கொள்ளும்போது, அவர்களின் கருவிழிகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.

எனவே, கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதில் தவறில்லை. அதைச் சரியாகப் பயன்படுத்தி, பாதுகாப்பாக இருந்தால் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

லென்ஸ் அணிவதால் பார்வை மங்குதல், சிவந்து போவது, கண்களில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்” என்று எச்சரிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: காங்கிரசுக்கு ஸ்டாலின் வைத்த செக்!

மாசம் ஒரு வாட்ஸப் குரூப் – அப்டேட் குமாரு

உத்வேகம் பெற்றது பெண்களுக்கான திட்டங்கள்!

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எந்த நாட்டுடையது? இந்தியாவின் இடம் எது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share