கல்யாணத்துக்கு முன்னால படம்பிடிக்கலாமா – ‘வைரல்’ டீசர்!

Published On:

| By Kavi

The Great Pre-Wedding Show

இன்று கல்யாண கொண்டாட்டங்களில் தவறாமல் இடம்பெறுகிற கேள்விகள் ‘ப்ரீ வெட்டிங் சூட் எப்படி வந்துருக்கு’, ‘போஸ்ட் வெட்டிங் சூட் எங்க பிளான் பண்ணியிருக்கீங்க’ என்பதுதான். ‘கல்யாண வீடியோ’ என்பது ‘ஹேண்டிட்’டாக இருக்க வேண்டுமென்ற நிலைமை ஒருகாலத்தில் இருந்ததுண்டு. பிறகு ‘குறும்படம்’, ‘மியூசிக் வீடியோ’ என்ற நிலையில் இருந்து முழு நீளத் திரைப்படம் போன்ற தரத்தில் அதனை உருவாக்குகிற ‘வித்வான்கள்’ பெருகிவிட்டார்கள். ’கல்யாண கேசட்’ அல்லது ‘கல்யாண டிவிடி’ என்றிருந்த விஷயத்தை, அவர்கள் தான் ‘ப்ரீ வெட்டிங் சூட்’, ‘போஸ்ட் வெட்டிங் சூட்’ என்று வெவ்வேறு பாகங்களாகப் பிரித்து மேய்ந்து வருகின்றனர்.

நகரம், பெருநகரம் என்றில்லாமல் கிராமங்கள் வரை இந்த கலாசாரம் வேரூன்றிவிட்டது.

ADVERTISEMENT

இந்த விஷயத்தை வைத்து ஒரு திரைப்படம் எடுத்தால் என்ன என்று களமிறங்கியிருக்கிறது ‘தி கிரேட் ப்ரீ வெட்டிங் ஷோ’ தெலுங்கு திரைப்படக் குழு. ’கல்யாணத்துக்கு முன்னால இப்படியெல்லாம் படம்பிடிக்கலாமா’ என்று கேட்கிற பெருசுகள் முதல் ‘இப்படி எடுக்கறதுதான் இப்போ ட்ரெண்டா இருக்கு’ என்று ஐடியாக்கள் தருகிற சிறுசுகள் வரை அனைவரது கருத்துகளையும் பிரதிபலிப்பதாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.

ராகுல் ஸ்ரீனிவாஸ் எழுதி இயக்கியுள்ள இந்த ‘சிறு பட்ஜெட்’ படத்தில் திருவீர், டீனா ஸ்ரவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுரேஷ் பொப்பிலி இதற்கு இசையமைத்திருக்கிறார்.

ADVERTISEMENT

’லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற சின்ன பட்ஜெட் படம் அடைந்திருக்கும் பெரிய வெற்றி, இப்படக்குழுவினருக்கு நிச்சயம் உற்சாகம் அளித்திருக்கும். அந்த மகிழ்ச்சியில் நிறைய அர்த்தம் இருக்கிறது என்பதாக உள்ளது இந்த ‘டீசர்’.

படமும் புதியதொரு திரையனுபவத்தைத் தந்தால் சரிதான்..!

ADVERTISEMENT
The Great Pre Wedding Show Movie Teaser | Thiruveer, Teena Sravya,Rohan R | Suresh Bobilli | Rahul S

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share