நடிகர் விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் “The Greatest of All Time” (The GOAT). இது நடிகர் விஜய்யின் 68 ஆவது படம்.
இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
Sci Fi ஆக்சன் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, கேரளா, ரஷ்யா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்களும், ஃபர்ஸ்ட் சிங்கிள் “விசில் போடு” பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு மறைந்த திரைப்பட நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த்தின் உருவத்தை வடிவமைத்து கேமியோ ரோலில் நடிக்க வைக்க பட குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கடந்த வாரம் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வைரலானது.
#TheGreatestOfAllTime#தமிழகவெற்றிக்கழகம்
@actorvijay அண்ணா ❤️ pic.twitter.com/U5KnmOqiem
— Vengadesan (@Vengade70732431) May 11, 2024
இந்நிலையில் தற்போது The GOAT படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகளுக்காக விஜய்யும் மற்றும் படக்குழுவினரும் அமெரிக்காவிற்கு சென்று உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஜய் மாஸ்க் அணிந்து கொண்டு ஃப்ளைட் ஏறுவதற்காக நடந்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
The GOAT திரைப்படம் இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் அல்லது Glimpse வீடியோ நடிகர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா