’ஜிகர்தண்டா 2’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு இன்று (மே 15)அறிவித்துள்ளது.
இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம், ஜிகர்தண்டா. சித்தார்த் நாயகனாக நடித்திருந்த இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.
நடிகர் பாபி சிம்ஹா கேங்ஸ்டராக மிரட்டிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.
மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து ஜிகர்தண்டா படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், அன்றைய தினம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்தப்படத்தின் அப்டேட்டானது இன்று வெளியாகியுள்ளது. அதன் படி, ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே தனுஷின் கேப்டன் ’மில்லர்’, சிவகார்த்திகேயனின் ’அயலான்’, கார்த்தியின் ’ஜப்பான்’ உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளி அன்று வெளியாவது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்