ADVERTISEMENT

சேப்பாக்கத்தில் டெல்லியுடன் மோதும் சிஎஸ்கே… டிக்கெட் விற்பனை எப்போது?

Published On:

| By christopher

the fiery cks vs dc ticket sale apr 2

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி மோதவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் (CSK vs DC) ஐபிஎல் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் நாளை (ஏப்ரல் 2) தொடங்குவதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. the fiery cks vs dc ticket sale apr 2

நடப்பாண்டிற்கான ஐபிஎல் (IPL 2025) திருவிழா மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடந்த தனது முதல் போட்டியில் மும்பை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

எனினும் அதன்பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடமும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமும் தோல்வியை தழுவியது. இதனால் புள்ளிப்பட்டியலிலும் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் வரும் 5ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி. இந்த போட்டியில் வெற்றிப் பெற்று ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டும் என்ற நெருக்கடியில் சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆன்லைன் டிக்கெட் விற்பனை!

இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை (ஏப்ரல் 2) காலை 10.15 மணியளவில் தொடங்குகிறது.

ADVERTISEMENT

அதனை www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் எனவும், போட்டிக்கான டிக்கெட் விலை 1,700 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரையிலான விற்பனை செய்யப்பட உள்ளது என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிக்கெட் விலை விவரம்!

ஸ்டாண்ட் C/D/E கீழ்ப்பகுதி – ரூ. 1,700

ஸ்டாண்ட் C/D/E மேற்பகுதி – ரூ. 3,500

ஸ்டாண்ட் I/J/K மேற்பகுதி – ரூ. 2,500

ஸ்டாண்ட் I/J/K கீழ்ப்பகுதி – ரூ. 4,000

ஸ்டாண்ட் K/M/K – ரூ. 7,500

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share