பிரதமரிடம் வாழ்த்து பெற்ற ஆஸ்கர் இயக்குனர்!

Published On:

| By Jegadeesh

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் சிறந்த ஆவண குறும்படமாக ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆஸ்கர் விருதை வென்றது.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரான ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவணப்படம் தாயை பிரிந்த குட்டி யானைகளையும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் கதையையும் மையப்படுத்தி உருவாகி இருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கோ டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இன்று (மார்ச் 30 ) ஆஸ்கர் விருதை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 30) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் வெற்றி உலகளவில் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கோ இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வேண்டாம் : மத்திய அரசு!

ADVERTISEMENT

தோனியிடம் கற்றுக்கொண்டது: மனம் திறந்த ஸ்டீவ் ஸ்மித்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share