வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா மக்களால் வண்டலூர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது.
சென்னையின் சிறந்த மற்றும் முக்கியமான சுற்றுலா தலமாக வண்டலூர் பூங்கா அமைந்திருக்கிறது. வார இறுதி நாட்களில் விடுமுறை என்பதால் பூங்காவிற்கு மக்கள் கூட்டம் மற்ற நாட்களை விட அதிகரிக்கும்.

இது இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்காவாகத் திகழ்கிறது. இது மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துடன் இணைக்கப்பட்டுச் செயல்படுகிறது.
முதுமலை தேசிய பூங்காவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது வனவிலங்கு சரணாலயம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்த பூங்காவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவை பராமரிக்கப்படுகின்றன. இதில் அழிந்து வரும் அரிய உயிரினங்களும் பரமாரிக்கப்பட்டு வருகின்றன.
பூங்காவில் வெள்ளை புலிகள், சிங்கங்கள், வரிக்குதிரை, முதலை, நீர்நாய், மனித குரங்கு, உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் இருக்கின்றன.
பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் மக்களின் நடமாட்டம் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் முழுவதுமாக பூங்கா ஊழியர்களால் கண்காணிக்கப்படு வருகின்றன.

தற்போது வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டின் சிறந்த பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று (செப்டம்பர் 10) தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் நாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் மேலாண்மை மற்றும் பராமரிப்பு அடிப்படையில் மதிப்பிடப்பட்டன. இந்த மதிப்பீட்டில் வண்டலூர் உயிரியல் பூங்கா 82 சதவீதம் சிறந்த உயிரியல் பூங்காவாக விளங்குகிறது.
அதன் அடிப்படையில் முதல் உயிரியல் பூங்காவாக வண்டலூர் பூங்கா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
Comments are closed.