ADVERTISEMENT

அஜித் முத்தமிட்டு, மனமுருகி வேண்டிய அந்த ’அயர்டன் சென்னா’ செய்த சம்பவம் இதுதான்!

Published On:

| By christopher

the ajithkumar respect his late icon Ayrton Senna

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. the ajithkumar respect his late icon Ayrton Senna

விடாமுயற்சி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், ஆதிக் இயக்கத்தில் ஃபேன் பாய் சம்பவமாக வெளியான குட் பேட் அக்லி வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை முறியடித்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து தற்போது ஐரோப்பிய GT 4 கார் பந்தயத்தில் தீவிரம் காட்டி வருகிறார் அஜித் குமார்.

ADVERTISEMENT

அதன்படி இதுவரை துபாய் மற்றும் இத்தாலியில் நடந்த 24H சீரிஸில் மூன்றாவது இடம் மற்றும் பெல்ஜியமில் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் இரண்டாவது இடம், இந்தியக் கொடியை உலகளவில் உயர்த்தி பிடித்து வருகிறார் அஜித்.

இந்த நிலையில் பிரேசிலில் நடக்கும் கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக தற்போது அங்கு தனது அஜித்குமார் ரேஸிங் டீமுடன் சென்றிருக்கிறார்.

ADVERTISEMENT

அங்கு தனது ரோல் மாடலும், பிரபல கார் ரேஸருமான அயர்டன் சென்னாவின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். மேலும் அப்போது சென்னாவின் சிலைக்கு ஏகே முத்தமும் கொடுத்தார். அதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

யார் இந்த அயர்டன் சென்னா?

அயர்டன் சென்னா ஒரு புகழ்பெற்ற பிரேசிலிய ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் ஆவார், அவர் தனது திறமை, வேகம் மற்றும் சாதனைக்காக உலகம் முழுவதும் அறியப்பட்டார்.

1988, 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் மெக்லாரனுக்காக மூன்று F1 உலக சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்தார். கார் பந்தய வரலாற்றில் மிகச்சிறந்த ஓட்டுநர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.

துரதிர்ஷ்டவசமாக, தனது 34ஆம் வயதில் சென்னா 1994 சான் மரினோ கிராண்ட் பிரிக்ஸின் போது ஒரு விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

அவரது மரணத்தைத் தொடர்ந்து, பிரேசில் அரசாங்கம் மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்தது. சுமார் 10 லட்சம் பிரேசிலிய மக்கள் சாவோ பாலோவில் கூடி அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

அவரது குடும்பத்தினரால் நிறுவப்பட்ட அயர்டன் சென்னா நிறுவனம், இதுவரை பிரேசில் முழுவதும் 36 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் பிரேசிலிய விளையாட்டின் பாதுகாவலராக சென்னா அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share