தமிழ்நாட்டில் வேறு எங்கும் கிளை அலுவலகங்கள் இல்லை – அகரம் பவுண்டேஷன்

By Pandeeswari Gurusamy

|

Published on 27 Apr 2026, 1:56 PM

agaram

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சென்னை தியாகராய நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் வேறு எங்கும் கிளை அலுவலகம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-ல் நடிகர் சூர்யா சமமான கல்வி வாய்ப்பு, ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்குக் கல்வியை உறுதி செய்யும் நோக்கில் அகரம் அறக்கட்டளையை தொடங்கினார்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அகரம் என்ற பெயரை சில தனிநபர்களும், அமைப்புகளும் முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில் அகரம் பவுண்டேசன் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “அகரம் பவுண்டேஷன் (Agaram Foundation) சென்னை தியாகராய நகரில் மட்டுமே தனது அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் எங்களுக்குக் கிளை அலுவலகங்கள் இல்லை என்பதைப் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

ADVERTISEMENT

‘அகரம் விதை திட்டத்திற்கான மாணவர் தேர்வு, சமூகப் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு முற்றிலும் வெளிப்படையான முறையில் நடைபெறுகிறது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் பணமாகவோ, பொருளாகவோ பெறப்படுவதில்லை.

சமீபகாலமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில தனிநபர்களும், அமைப்புகளும் “அகரம்” என்ற பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி, தவறான தகவல்களைப் பரப்புவதோடு, மாணவர்களையும் பெற்றோர்களையும் பொதுமக்களையும் ஏமாற்ற முயற்சிப்பது கவனத்திற்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

எனவே, ‘அகரம்’ சார்பாக உங்களை அணுகுவதாகக் கூறும் நபர்கள் அல்லது அமைப்புகளிடம், எங்களின் அதிகாரப்பூர்வத் தளங்களில் உறுதிப்படுத்தாமல் எக்காரணம் கொண்டும் அசல் கல்விச் சான்றிதழ்கள், பணம், தனிப்பட்ட தகவல்கள் வழங்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தகவல்களுக்கு கீழ்க்காணும் தொடர்பு விவரங்களை அணுகவும் :

முகவரி: அகரம் பவுண்டேஷன், 15, அருளாம்பாள் தெரு, தியாகராய நகர் – 600017

தொலைபேசி எண்கள்: 044 43506361 / 98418 91000

மின்னஞ்சல்: info@agaram.in

இணையதளம்: agaram.in” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel