கிச்சன் கீர்த்தனா: தட்டைப்பயறு வடை

Published On:

| By Kavi

Thattapayiru vadai Recipe in Tamil Kitchen Keerthana

தட்டைப்பயறில் உடலுக்கு அத்தியாவசியமான பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் ஏ, பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் காணப்படுகின்றன.  அப்படிப்பட்ட தட்டைப்பயறில் வடை செய்து சுவைத்து ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

என்ன தேவை?

தட்டைப்பயறு – 250 கிராம்
பெரிய வெங்காயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 2
உப்பு – 5 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி – 5 கிராம்
பூண்டு – 3 பல்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
சோம்பு அரை – டேபிள்ஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தட்டைப்பயறை நன்றாகக் கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு ஊறவைத்த தட்டைப்பயறுடன், சீரகம், சோம்பு, உப்பு, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து, ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும். பிறகு சூடான எண்ணெயில் வடைகளாகப் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே நிர்வாகம் சொன்ன முக்கிய தகவல்!

பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை: மண்ணைப் பாதுகாக்கும் மஞ்சப்பை!

IPL 2024: பிளே-ஆஃப் ஆட்டங்கள் மழையால் ரத்தானால் என்ன நடக்கும்?

சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் “கொட்டுக்காளி” – மாஸ் காட்டும் சூரி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share