“நன்றி ஈரோடு” : விஜய் பகிர்ந்த வீடியோ வைரல்!

Published On:

| By Kavi

ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டரை மாத இடைவெளிக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று (டிசம்னர் 18) ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

சுமார்16 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடந்த இந்த கூட்டத்தில், தனது பிரச்சார பேருந்தின் மேற்கூரையில் நின்று தொண்டர்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார்.

பேசி முடித்ததும் ஒரு செல்பி எடுத்துக்கொள்கிறேன் என்று கூறிய விஜய், அங்கு கூடியிருந்தவர்களை தனது செல்போன் முன் கேமரா மூலம் வீடியோவாக பதிவு செய்தார். அப்போது அன்பை வெளிகாட்டும் விதமாக கையில் ஹாட்டின் காட்டுமாறு சைகையில் சொன்னார்.

ADVERTISEMENT

அதன்படி தொண்டர்கள் விஜய்யை பார்த்து ஹார்டின் காட்டுவதும், தவெக துண்டை தலைக்கு மேல் தூக்கி ஆரவாரம் செய்வதும் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை “நன்றி ஈரோடு” என்ற தலைப்பில் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக இந்த வீடியோ பதிவிட்ட ஒரு மணிநேரத்திலேயே இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கு மேல் லைக்குகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share