வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு!

Published On:

| By Kavi

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011 – 2021 வரை அதிமுக ஆட்சியில் இருந்தது. இதில் 2011- 2016 வரை தமிழக வீட்டு வசதி வாரிய அமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆர். வைத்திலிங்கம் பொறுப்பு வகித்தார்.

இந்த நிலையில் 2015 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமம் வீடுகள் கட்ட அனுமதி வழங்குவதற்கு வைத்தியலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு ஆகியோர் 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.

Image

இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு சண்முக பிரபு, ஸ்ரீராம் குழு இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 1058 சதவிகிதம் அதாவது 33 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார் என்றும்  தனது மனைவி, மகன்கள் பெயரில் திருவெறும்பூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்றும்  வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சரவணன் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோன்று 2017ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அறப்போர் இயக்கம்  புகார் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

ஆதவ் ஆர்ஜூனாவுக்கு விசிகவுக்குள் வலுக்கும் எதிர்ப்பு!

மனைவி பட்ட வேதனை… தாங்க முடியாத 90 வயது கணவர் செய்த காரியம்… கண்ணீரில் மூழ்கிய கன்னியாகுமரி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share