தஞ்சாவூரில் கொடூரம்… வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை!

Published On:

| By Minnambalam Login1

thanjavur teacher killed classroom

தஞ்சாவூரில் பாடம் நடத்திக்கொண்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் 26 வயதான ரமணி. இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் அங்கு அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

இதற்கிடையில், ரமணியின் பெற்றோர் அவருக்குக் கல்யாணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தனர். அப்போது மதனின் குடும்பத்தினர் ரமணியை பெண் கேட்டுச் சென்றுள்ளனர்.

ஆனால், மதனை கல்யாணம் செய்வதற்கு இஷ்டமில்லை என்று ரமணி கூறியுள்ளார். இதனைக் ஏற்காத மதன், ரமணி தன்னை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தான் ரமணி வழக்கம் போல் இன்று பள்ளிக்குச் சென்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வகுப்பறைக்குள் புகுந்த மதன், ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை நேரில் கண்ட மாணவர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

இதனைக் கேட்டு பக்கத்து வகுப்பறையில் இருக்கும் ஆசிரியர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால், அதற்குள் மதன் தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமணியை ஆசிரியர்கள் அருகில் இருக்கும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் ரமணி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த நிலையில், மதனை போலீசார் கைது செய்துவிட்டதாகத் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது.

தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் 13ஆம் தேதி சென்னை அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு உயிர்பிழைத்த நிலையில், தற்போது அரசுப் பள்ளி ஆசிரியர் வகுப்பறையிலேயே கொலை செய்யப்பட்டது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு… சிபிஐக்கு மாற்றம்! 

மகாராஷ்டிரா தேர்தல் : 11 மணி நிலவரம்!

ஷாருக்கான் மகன் இயக்கும் நெட்ஃப்லிக்ஸ் வெப் சீரிஸ்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share