2025 – 26-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்கிறார். முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில், அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார். Thangam thennarasu clarifies rupee
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, “இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க நம்முடைய முதல்வர் வழிகாட்டுதலோடு சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான அரசு எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் கீழ் இயங்கி வருகிறது. எனவே, அந்த தத்துவத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், தமிழக மக்களின் வளர்ச்சிக்கு ஏற்றம் காணும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை அமையும்” என்றார்.
தொடர்ந்து பட்ஜெட் இலட்சினையில் ₹ பதில், தமிழ் எழுத்தான ‘ரூ’ குறிப்பிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு,
“எங்களை பொறுத்தவரை எந்த ஒரு தேசிய சின்னத்தையும் அவமானப்படுத்துவதோ அல்லது அவற்றையெல்லாம் குறைத்து மதிப்பிடுவதோ நிச்சயமாக நோக்கம் இல்லை. இந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை, வளர்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார். Thangam thennarasu clarifies rupee