ADVERTISEMENT

சமுத்திரகனி – தம்பி ராமையா நடிக்கும் ‘ ராஜா கிளி’! : ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On:

| By Sharma S

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்குநராக அறிமுகமாகும் ‘ராஜாகிளி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் தம்பி ராமையா இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

இந்தத் திரைப்படம் வருகிற நவ.29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தேதியில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’, சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ ஆகிய திரைப்படங்களும் வெளியாகிறது.

ADVERTISEMENT

இந்தப் படத்தில் சமுத்திரகனி, தம்பி ராமையா, சுவேதா ஷிரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா, எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, ’ஆடுகளம்’ நரேன், கிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமுத்திரகனி – தம்பி ராமய்யா கூட்டணியில் வெளியான ‘சாட்டை’, ‘அடுத்த சாட்டை’, ‘அப்பா’, ‘விநோதய சித்தம்’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்திற்கு கேதர்நாத் – கோபிநாத் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்ய, சுதர்சன் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார். படத்தின் பின்னணி இசையை சாய் தினேஷ் அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் கதை, வசனம், பாடல்களை தம்பி ராமையாவே எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ADVERTISEMENT

கங்குவா ஹீரோயின் திஷா பதானி தந்தைக்கு நடந்த சோகம்… இத்தனைக்கும் முன்னாள் டி.எஸ்.பியாம்!

‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share