GOAT: படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?

Published On:

| By Manjula

விஜய்-வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் ‘GOAT’ படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த, புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தளபதி விஜயின் 68-வது படமாக உருவாகி வரும் ‘GOAT’ படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா என மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். நான்காவது ஹீரோயினாக திரிஷாவும் சமீபத்தில் இணைந்தார்.

கதைப்படி விஜயின் நண்பர்களாக பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் வில்லனாக மோகனும் நடித்து வருகின்றனர். மறைந்த கேப்டன் விஜயகாந்தும் ஒருசில காட்சிகள் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக வருகிறார். இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ளார். அதில் ஒரு விஜய் வில்லனாக வருகிறார்.

படத்தில் தளபதி விஜய் ஒரு பாடலையும், இசைஞானி இளையராஜா ஒரு பாடலையும் பாடியுள்ளனர். கங்கை அமரன், அறிவு ஆகியோர் படத்தின் பாடல்களை எழுதி இருக்கின்றனர். பிரண்ட்ஷிப், காதல் என மொத்தம் படத்தில் 4 பாடல்கள் உள்ளன.

தற்போது படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டதாக தெரிகிறது. தொழில்நுட்ப ரீதியிலான காட்சிகளுக்காக படக்குழு விரைவில் ரஷ்யா செல்லவிருக்கிறது. இந்தநிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதன்படி படத்தின் முதல் சிங்கிள் வருகின்ற ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறதாம். இது நண்பர்களுக்கு இடையிலான பிரண்ட்ஷிப் பாடலாக இருக்கும் என தெரிகிறது. மறுபுறம் படத்தின் டீசர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

அதன்படி பார்த்தால் படம் வருகின்ற சுதந்திர தினத்தன்று வெளியாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விரைவில் படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டேனியல் பாலாஜி மறைவு : கமல், சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்!

மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம்!

தமிழ்நாடு ரயில்வே ஊழியர்களுக்கு தபால் ஓட்டு: வைகோ வலியுறுத்தல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share