தளபதி விஜயின் 69-வது படத்தினை இயக்கப்போவது யார்? என்ற கேள்விக்கான விடை இன்னும் கூட கிடைக்கவில்லை.
இந்த போட்டியில் அட்லி, ஹெச்.வினோத், நெல்சன் திலீப்குமார், ஷங்கர், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.
டோலிவுட் நிறுவனமான டிவிவி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படம் தான், விஜயின் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த செய்தி ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும், கடைசி படம் தளபதிக்கு மாஸாக இருக்க வேண்டும் எனவே, அட்லி அல்லது ஷங்கரை இயக்க சொல்லுங்கள் என சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேலே சொன்ன இயக்குநர்கள் யாரும் விஜயை இயக்க போவதில்லை என புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடைசி படம் என்றாலும் இந்த லிஸ்டில் இல்லாத ஒரு இயக்குநர் இருந்தால் பெட்டர் என விஜய் நினைக்கிறாராம்.
இதனால் அது தெலுங்கு இயக்குநராகவும் இருக்கலாம் என யூகங்கள் எழுந்துள்ளன. எனவே விரைவில் இயக்குநர் மற்றும் படம் குறித்த அறிவிப்பினை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.