தளபதி 69! ரூ.250 கோடி கேட்கும் விஜய்… தயாரிக்கப் போவது யார்?

Published On:

| By Kavi

thalapathy 69 vijay salary

கட்சி ஆரம்பித்துவிட்டதால் சினிமாவுக்கு முழுக்கு போட்ட நடிகர் விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருகும் நிலையில்…  பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம்தான் விஜய்யின் அந்த  ‘லாஸ்ட் புல்லட்’டை தயாரிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார்.

தற்போது நடித்து கொண்டிருக்கும் படப் பணிகளை முடித்து கொடுத்த பின் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் நேரடியாக தனது கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் எனவும் அதன் பின் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் முழு நேரமும் அரசியல் பணிகளில் ஈடுபட போவதாகவும்  அறிவித்தார் விஜய்.

அதனால் நடிகர் விஜய் தனது திரையுலக வாழ்க்கையில் நடிக்கப் போகும் கடைசி படம் அரசியல் சம்பந்தபட்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்றுவரை அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு  வெளியாகவில்லை.

நடிகர் விஜய் நடிப்பில் தொடர்ந்து மூன்று படங்களை இயக்கி வெற்றிகண்ட அட்லீ அவரது கடைசி படத்தை இயக்குவார் என கூறப்பட்டு வந்தது. இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டு,  விஜய் நடிக்கும் கடைசி படத்தை இயக்கப்போவது் இயக்குநர் எச்.வினோத் என்று தகவல் வருகிறது. சமூகம் சார்ந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வெற்றிகண்டவர் எச்.வினோத்.

அஜீத் குமார் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் வங்கிகள் சாமானிய மக்களை எப்படியெல்லாம் வதைக்கின்றன என்பதை வெளிப்படுத்தியவர் வினோத்.

அரசியல் புரிதலும், அதில் ஆர்வமும் கொண்டவர் வினோத் என்பதால்…  அவர் இயக்கத்தில் நடிப்பது சரியானதாக இருக்கும் என விஜய் விருப்பப்படுவதாக ஒரு தகவல் உலா வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் 69வது படத்தை பெங்களூரை சேர்ந்த  கே. வி.என்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திரைப்பட விநியோகத்தில் அனுபவம் பெற்ற  இந்நிறுவனம் தற்போது கேஜிஎஃப் நாயகன் யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்தைத் தயாரித்து வருகிறது. சூர்யா நடிக்கும் கங்குவா படத்தில் இணைந்துள்ளது.

கேஜி எஃப் யாஷ் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரிப்பதன் மூலம் இந்திய அளவில் திரைப்பட வியாபார வட்டாரத்தில் கவனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில்,   “அந்த நிறுவனத்தை விஜய் தரப்பில் இருந்தே தொடர்பு கொண்டு அவர் நடிக்கும் கடைசி படத்தை தயாரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதன்பின் அது சம்பந்தமாக இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவர்த்தைகளில் விஜய் சம்பளம் உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளது.  இன்னும் சில விஷயங்கள் பேசி இறுதி முடிவு எட்டப்பட வேண்டியுள்ளது. அதன் பின்னரே விஜய் 69 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் ” என்கின்றனர் விஜய் வட்டாரத்தில்.

விஜய் நடிக்கும் படத்தை தயாரிக்க தமிழ் சினிமாவில் பலரும் போட்டியில் இருக்கும் சூழலில் கர்நாடகத்தை சேர்ந்த கே.வி.என் நிறுவனத்தை விஜய் தரப்பு தேடிப்போக வேண்டிய காரணம் என்ன என்று கேட்டால்,

“சுமார் 200 கோடி ரூபாய் செலவில் விஜய் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து முடித்து விடலாம். ஆனால் விஜய் நடிக்கும் கடைசி படத்திற்கு அவர் எதிர்பார்க்கும் சம்பளம் 250 கோடி ரூபாய். தயாரிப்பு செலவு 100 கோடி என்றால் கூட வெளியீட்டு செலவு எல்லாம் சேர்ந்துமொத்த பட்ஜெட் 400 கோடி ஆகிவிடும்.

அது மட்டுமின்றி தமிழ்நாடு அரசியல் களத்தை பின்புலமாக கொண்டே திரைக்கதையும், பஞ்ச் வசனங்களும் இருக்க கூடும் என்பதால் தமிழகத்தில் படத்தை தயாரிக்கும் நிறுவனத்திற்கு அரசியல் நெருக்கடிகள் வரலாம். அதனை எதிர்கொண்டு படத்தை தயாரித்து வெளியிட வலிமையான தயாரிப்பு நிறுவனமாக இருக்க வேண்டும்.

thalapathy 69 vijay salary

அதற்கான தயாரிப்பு நிறுவனங்கள் இங்கு இல்லை.  படத்தின் பட்ஜெட்  400 கோடியை தாண்டும் நிலையில், அந்த அளவிற்கு ரிஸ்க் எடுக்க இங்குள்ள தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. படத்தை வெற்றி பெற வைக்க மார்கெட்டிங், புரமோஷன் பிரதானமானது.  அதனாலேயே தமிழ்நாட்டை கடந்து விஜய் 69படத்தை தயாரிக்கும் வாய்ப்பு அண்டை மாநிலத்திற்கு சென்றுள்ளது”  என்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

CSK-வுக்கு எதிரான ஆட்டம்… கில்லுக்கு ரூ.24 லட்சம் அபராதம்… காரணம் என்ன?

ஸ்டார் தொகுதி பார்வை… கள்ளக்குறிச்சி: திமுக, அதிமுகவின் கணக்குகள்!

வாடிவாசல் : சூர்யாவுக்கு வில்லன் நான்தான் : அமீரின் அப்டேட்!

75 வயதா? அடுத்த பிரதமரும் மோடிதான்… கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share