விஜய்யுடன் இணையும் வெங்கட் பிரபு?

Published On:

| By Jegadeesh

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கும் இயக்குநர் குறித்து தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’லியோ’ படத்தில் நடித்துவருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

ADVERTISEMENT

இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது பெரும்பாலும் சீரியஸான ரோல்களில் நடித்துவரும் நிலையில், ஒருவேளை வெங்கட் பிரபு தளபதி 68 படத்தை இயக்குவது உறுதியானால் விஜய்யை கலகலப்பான வேடத்தில் காணலாம் என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

முன்னதாக இந்த படத்தை கோபிசந்த் மல்லினேனி இயக்கவிருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா”: குடியாத்தத்தில் ஆடிய பெண் காவலர்!

கள ஆய்வுக்கு முக்கியத்துவம் :சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share