இணையத்தில் ட்ரெண்டாகும் ‘Thala For A Reason’: காரணம் என்ன?

Published On:

| By christopher

கிரிக்கெட் களத்தில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எப்போதும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு நபர் மகேந்திர சிங் தோனி.

ராஞ்சி நகரில் ரெட்ரோ கார்களில் வலம் வந்தபோதும் சரி, இளம் கிரிக்கெட் வீரருக்கு பைக்கில் லிப்ட் தந்தபோதும் சரி, தனது பூர்வீக கிராமத்திற்கு விசிட் சென்றபோதும் சரி, அவரின் ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் தல தோனியை ட்ரெண்டிங்கில் வைக்க தவறியதில்லை.

இந்நிலையில் ‘கூகுள் இந்தியா’ நிறுவனம் தனது X தள பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தது. அதில் ஒரு காகிதத்தில் ‘7ம் எண்ணின் சிறப்பு என்ன?’ என கூகுள் தளத்தில் தேடினால் என்ன பதில் கிடைக்கும் என அச்சிடப்பட்டிருந்தது. அதன் பின்னணியில், ஒரு லேப்டாப்பில் கூகுள் க்ரோமில் 7 டேப்களில் ‘தோனி’, ‘தோனி’ என தேடப்பட்டு, தோனியின் புகைப்படங்கள் தென்படுவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிந்தது. இந்த புகைப்படத்திற்கான கேப்ஷனாக, “செய்தி தெளிவாக உள்ளது. Thala For A Reason”, என கூகுள் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

இதை தொடர்ந்து, #ThalaForAReason என்ற ஹேஸ்டேக்கை தோனி ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், தற்போது இந்த ட்ரெண்டில் பிரபல நிறுவனங்களும் பங்கு பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், “ஜியோ இந்த வருடத்துடன் 7 வருடங்களை பூர்த்தி செய்கிறது. Thala For A Reason”, என தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

டிரெண்டிங்கில் இணைந்த இந்திய தேர்தல் ஆணையமும், தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரமாக ஒவ்வொரு வாக்காளரும் Thala For A Reason என பதிவிட்டுள்ளது.

அதேபோல, டாமினோஸ் பிட்சா நிறுவனம், “ஒரு பிட்சாவில் 6 துண்டுகள் இருக்கும். 1 + 6 = 7. Thala For A Reason”, என ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.

யூடியூப் இந்தியா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “Youtube-ல் 7 எழுத்துக்கள் தான் உள்ளது. Thala For A Reason”, என ஒரு பதிவை பதிவிட்டுள்ளது.

 

அமேசான் ப்ரைம் நிறுவனம், தங்களின் ‘PRIME’ என்ற பெயரில் உள்ள எழுத்துகள், ஆங்கில எழுத்துக்கள் வரிசையில் எத்தனையாவது இடத்தில் வருகிறது என்ற எங்களை கூட்டி, அது இறுதியில் 7 என்று முடிவது போல ஒரு கணக்கை X தளத்தில் பகிர்ந்து, “Thala For A Reason”, என குறிப்பிட்டுள்ளது.

இதேபோல, ஸ்விக்கி, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், மிந்த்ரா, பிலிங்க்இட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் “Thala For A Reason” என்ற கான்செப்ட்டில் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மகிழ்

பொங்கல் 2024 விடுமுறை… இன்று முதல் அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு!

விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share