தக்காளியின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் தக்காளியில் உள்ள லைகோபீன் (Lycopene) என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உடலில் தேவையற்ற கொழுப்பு தங்குவதைத் தடுக்கவும் உதவும்.
இந்த தக்காளி அடையில் உள்ள அரிசி மற்றும் பருப்பின் கலவை, உடலின் புரதச்சத்து அதிகரிப்பைச் சமன் செய்ய உதவும் என்பதால் அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
அரிசி – 100 கிராம்
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு – தலா 50 கிராம்
பாசிப் பருப்பு – 25 கிராம்
தக்காளி – 2
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 3 பல்
காய்ந்த மிளகாய் – 2
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – சிறிதளவு
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசி, பருப்பு வகைகளைச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு களைந்து எடுத்து, மிளகாய், உப்பு, சோம்பு, தக்காளி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் தண்ணீரைவிட்டுக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
இதனுடன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், மஞ்சள்தூள், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து அடைமாவு பதத்துக்குத் தண்ணீர் ஊற்றிக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு நன்கு சிவந்ததும் எடுக்கவும்.
கால்நடைப் பூங்காவில் தோல் தொழிற்சாலை: விவசாயிகள் எதிர்ப்பு!