தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். thaipusam festival celebrated
தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தைப்பூசமான இன்று (பிப்ரவரி 11) ஏராளமான பக்தர்கள் முருகன் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை என முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் கூட்டம் சாரை, சாரையாக வந்துகொண்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம் thaipusam festival celebrated

முருகனின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் அதிகாலை முதலே பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பாத யத்திரையாக பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டண தரிசனம் செய்ய வருபவர்கள் கோயிலின் இடது புறமாகவும், இலவச தரிசனம் செய்ய வருபவர்கள் கோயிலின் வலது புறமாகவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக கிரிவலப் பாதையில் ஒரு கிலோ மீட்டர் தூர தொலைவுக்கு வெறும் மக்கள் தலையை மட்டுமே காண முடிகிறது. இதையொட்டி 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பொருத்தப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
திருச்செந்தூர் thaipusam festival celebrated

இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று காலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டது. அப்போது விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்று தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்ற வருகின்றன.
இதையொட்டி திருச்செந்தூர் கடற்கரையில் தைப்பூசம் களைகட்டி உள்ளது. அரோகரா கோஷம் விண்ணை பிளக்கிறது. பால்காவடி, இளநீர் காவடி, மயில் காவடி என காவடி எடுத்தும் அலகு குத்தியும் வந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். 800ககும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பழனி thaipusam festival celebrated

தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற இந்த திருக்கல்யாண நிகழ்வில் முத்துகுமார சுவாமி வள்ளி – தெய்வானை சமேதராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பழனியில் காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் என பக்தர்கள் ஆடிய ஆட்டம் காண்போரை பரவசமடையச் செய்தது. தொடர்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறவுள்ளது. பழனியில் லட்சக்கணக்கானோர் குவிந்து வருவதால் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுவாமிமலை thaipusam festival celebrated

நான்காம் படை வீடான கும்பகோணம் சுவாமிமலை முருகன் கோயிலில், அதிகாலை நடைதிறக்கப்பட்டு மஞ்சள், பால், சந்தனத்தால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தங்க கவசம், வெள்ளி வேலுடன் முருக பெருமான் அருள் பாலித்தார். பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
திருத்தணி thaipusaஈக்ஷுm festival celebrated

ஐந்தாம் படை வீடான திருத்தணியில் அதிகாலை 3 மணி முதலே வருகைத் தந்து மூலவரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். காலை 5 மணிக்கு பன்னீர், விபூதி ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. திருத்தணியில் கோயிலுக்குள் வரிசைக்காக அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை தாண்டி குதித்து சென்று பக்தர்கள் தரிசனம் செய்வதால் கோயிலுக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பழமுதிர்சோலை
ஆறாம் படை வீடான மதுரை பழமுதிர்சோலையிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். காலை 10 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி சிம்மாசனத்தில் புறப்பாடாகி தீர்த்தவாரி தைப்பூச மகா அபிஷேகம் நடைபெறவுள்ளது.
வடபழனி முருகன் கோயில்! thaipusam festival celebrated

சென்னை, வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் வந்துகொண்டிருக்கின்றனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை வரையில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
அதிகாலை திருப்பள்ளி எழுச்சி நடைபெற்ற நிலையில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் கொண்டு வரும் பாலால், முருகனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
