தாய்லாந்து சுற்றுலாவுக்கு பெயர் போன நாடு. ஆசியாவில் அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நாடாக தாய்லாந்து உள்ளது. தலைநகர் பாங்காங்கும் அமெரிக்க நகரங்களுக்கு இணையாக புகழ்பெற்றது. இந்த நாட்டில் தன்பாலின திருமணம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே இந்த நாட்டில்தான் கஞ்சாவை மக்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதியுள்ளது.
இந்த நாட்டில் 20 வயதுகுட்பட்டவர்கள் கஞ்சா குடிக்க அனுமதியில்லை . கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களாக இருந்தால், மருத்துவர்கள் அறிவுரையின்படி எடுத்துக் கொள்ளலாம். விஷயம் இப்படியிருக்கையில் சூதாட்டத்தையும் அந்த நாட்டில் அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, பல்வேறு நிபந்தனைகளுடன் சூதாட்டம் அந்த நாட்டில் அங்கீரிக்கப்படுகிறது. இதற்கான சட்டதிருத்தம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பல வெளிநாட்டு சூதாட்ட நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்றும் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் என்ற நோக்கத்திலும் அந்த நாட்டில் சூதாட்டம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. Thailand legalise gambling
20 வயதுக்குட்பட்டவர்கள் கேசினோவுக்குள் நுழைய அனுமதியில்லை. தாய்லாந்து குடிமகனாக இருந்தால் கடந்த 6 மாதங்களாக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வங்கி கணக்கில் தொடர்ந்து பராமரித்து இருந்தால் மட்டுமே கேசினோவுக்குள் நுழைய முடியும். இது தொடர்பான வங்கி ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இதையடுத்து, லாஸ்வேகாஸ் கேம்ப்ளிங் சேன்ட் கார்ப்பரேஷன், கேலக்ஸி என்டர்டெயின்ட்மெட் , எம்.ஜி.எம். ரிசார்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் தாய்லாந்தில் கேசினோ பிசினஸில் களமிறங்க முடிவு செய்துள்ளன.
உலகிலேயே அதிகம் சூதாட்டம் நடைபெறும் நாடுகளில் 3வது இடத்தில் தாய்லாந்து உள்ளது. முதல் இடத்தில் மக்காவு நாடும் அடுத்த இடத்தில் அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரமும் இருக்கின்றன.
தாய்லாந்தில் சூதாட்டத்தை அங்கீகரிக்க சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குடிமக்களை சூதாட்டத்துக்கு அடிமையாக்கும் என்றும் அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.