தை மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை

Published On:

| By Selvam


யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

14.1.2025 முதல் 12.2.2025 வரை

உயர்வுகள் வரக்கூடிய காலகட்டம்.

பணியிடத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். எதிர்பார்த்த உயர்வுகள் நிச்சயம் வந்து சேரும்.

வீட்டில் விடியல் வெளிச்சம் பரவத்தொடங்கும். மூன்றாம் நபரிடம் குடும்ப ரகசியம் பேசவேண்டாம்.

தேவையற்ற தரல், பெறலைத் தவிருங்கள்.

தம்பதியர் மனம்விட்டுப் பேசுவது நல்லது.

செய்யும் தொழிலில் நேரடி கவனமும் நேர்மையும் முக்கியம். பிறர் கட்டாயத்துக்காக வர்த்தகக் கடன் வாங்க வேண்டாம்.

அரசு, அரசியலில் உள்ளவர்கள் மேலிடத்தின் வார்த்தைகளைக் கனவிலும் மீறவேண்டாம்.

பணத்தைக் கையாள்வதில் நிதானம் முக்கியம்.

கலை, படைப்புத் துறையினரின் பலகாலக் கனவுகள் ஈடேறத் தொடங்கும்.

வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள்.

தலைவலி, முக உறுப்புகள், எலும்பு உபாதைகள் வரலாம்.

பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும்.

தை மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம்

ஆஸ்திரேலியாவுடன் படுதோல்வி எதிரொலி… சிக்கலில் கம்பீர், ரோகித், கோலி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share