தை மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி

Published On:

| By Selvam

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

14.1.2025 முதல் 12.2.2025 வரை

அல்லல்கள் படிப்படியாகக் குறையக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் திட்டமிட்டு செயல்பட்டால், தித்திக்கும் செய்திகள் வரும். கோப்புகளில் அலட்சியம் கூடாது.

வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். உறவுகள், நட்புகள் தேடிவரும். யாரிடமும் குத்தல் குதர்க்கம் வேண்டாம். தரல், பெறலை நேரடியாகச் செய்யுங்கள்.

செய்யும் தொழிலில் வளர்ச்சி சீராக இருக்கும். பிறர் பேச்சைக்கேட்டுப் பெரும் முதலீடு செய்ய வேண்டாம். அரசு, அரசியல் துறையினர் அகலக்கால் வைக்க வேண்டாம். புறம்பேசுவோரை உடனே உதறுங்கள். கலை, படைப்புத் துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும்.

பயணத்தில் உடைமைகள் பத்திரம். அலர்ஜி, அல்சர், தோல் உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு மங்களம் தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தை மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை

தை மாத நட்சத்திர பலன்கள்: பரணி

தை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share