-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
14.1.2025 முதல் 12.2.2025 வரை
நிம்மதி இடம்பிடிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடி வரும். மூன்றாம் நபர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். குத்தல் குதர்க்கம் தவிர்த்தால் அது நிலைக்கும். வாரிசுகளால் பெருமை உண்டு. வரவில் இருந்த தடைகள் நீங்கும். உறவுகளிடம் தற்பெருமை பேசவேண்டாம்.
செய்யும் தொழிலில் வரவு சீராகும். புதிய முதலீடுகளைத் தவிருங்கள். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு மேலிடத்தின் ஆதரவு கிட்டும். வார்த்தைகளில் நிதானம் முக்கியம். கலை, படைப்புத் துறையினர் சோம்பலை அறவே தவிருங்கள்.
வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். உணவில் நிதானம் முக்கியம். அலர்ஜி, அல்சர், செரிமானப் பிரச்னைகள் வரலாம். அனுமன் வழிபாடு ஆனந்தம் தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தை மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி
ஈரோடு கிழக்கு : பெண் வேட்பாளரை களமிறக்கிய சீமான்… யார் இந்த சீதாலட்சுமி?