facebook நிறுவனம், உலகளவில் பல மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. அதேபோல் வாட்ஸ் அப் அப்ளிகேஷனையும் facebook நிறுவனம் வாங்கியபின்னர், இரண்டு அப்ளிகேஷன்களுக்கும் ஒரே மாதிரியான அப்டேட்களை வெளியிட்டபடி இருக்கின்றனர். அதன் வரிசையில், கடந்த ஜனவரி மாதம் வாட்ஸ் அப்-இன் 8ஆவது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி அனைத்து பயனர்களுக்கும் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டது. பயனர்கள் அவர்களின் status-ஐ நாம் புதியமுறையில் அப்லோடு செய்யும் வசதியும், அதை யார் பார்த்தார்கள் என்று தெரிந்துகொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இன்று வெளியான facebook அப்டேட்டும் இதேபோன்று அமைந்துள்ளது. மெசெஞ்சர் பயன்படுத்தும் அனைத்துப் பயனர்களும் அதில் வழங்கியுள்ள **மை டே** (My Day) என்ற வசதியைப் பயன்படுத்தி 24 மணி நேரம் மட்டும் காட்சியளிக்கும் போட்டோஸ், வீடியோஸ், போன்றவற்றை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். 24 மணிநேரத்துக்குப் பிறகு அவை தானாக மறைந்துவிடுவதுபோல் இந்த அப்டேட் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதற்குமுன்னர் வாட்ஸ் அப்-பிலும் இதேபோன்ற அப்டேட் வெளியாகி முதலில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் இந்தமுறை அதுபோன்ற எந்தவித ஏமாற்றமும் இல்லாமல் புதிய எளிமையான அப்டேட் ஆக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த அப்டேட்மூலம் நாம் மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றுடன் எமோஜிகள், எழுத்துகள் சேர்த்துக்கொள்ள முடியும். My day என்ற வசதியை மெசெஞ்சரின் கீழே உள்ள ஒரு வட்டமான பட்டனை தொடுவதன்மூலம் பெறமுடியும். நாம் ஷேர் செய்யும் மற்ற மீடியாஃபைல்கள் எப்போதும்போல் தான் இருக்கும்.