அமெரிக்காவில் பெண் ஒருவர் ஒரே ஆண்டில் 2,645 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து, 3.5 லட்சம் குழந்தைகளை உயிர் பிழைக்க வைத்துள்ளார்.
அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவர் அலீஸ் அக்லெட்ரே என்ற 36 வயது தாய். 2023 ஆம் ஆண்டில் 2,645 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளார். இவரது தாய்ப்பாலை கொடுத்து 3.5 லட்சம் குறை பிரவச குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு தனக்கு முதல் குழந்தை பிறந்ததில் இருந்து இவர் தாய்ப்பால் தானம் செய்து வருகிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு 1,569 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். இவருக்கு 4 குழந்தைகள் உண்டு. மூத்த மகன் கேலுக்கு தற்போது 14 வயதாகிறது. இதில், ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.
இது குறித்து அலீஸ் கூறுகையில், ‘எனது குடும்பத்தினர் எனக்கு சப்போர்ட்டாக இருப்பதால் என்னால் இவ்வளவு தாய்ப்பால் கொடுக்க முடிந்தது. என்னால், நல்ல விஷயங்களை செய்ய அடிக்கடி பணம் கொடுக்க முடியவில்லை. இதனால், என்னால் முடிந்த இந்த நல்ல காரியத்தை செய்கிறேன். என்னை போலவே இன்னும் அதிக தாய்மார்கள் தங்கள் தாய்ப்பாலை தானம் செய்ய முன் வந்தால், ஏராளமான குழந்தைகளை காப்பாற்ற முடியும். இந்த விஷயத்தில் கிடைக்கும் சந்தோஷமும் மன மகிழ்ச்சியும் வேறு எந்த விஷயத்திலும் கிடைக்காது’ என்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
டெல்லி கணேஷின் உதவும் உள்ளம்… யூடியூப்பரின் உருக்கமான பேஸ்புக் பதிவு!