ஆசிரியர் தகுதித் தேர்வு TET முடிவுகள் வெளியீடு-பிப்.2 முதல் சான்றிதழ் பெறலாம்

Published On:

| By Mathi

TET Result

ஆசிரியர் தகுதித் தேர்வு TET முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை பார்வையிட https://trb.tn.gov.in/more_notification_details.php?id=MN-999

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செய்திக் குறிப்பு: 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள் – I 15.11.2025 அன்றும் தாள் – II 16.11.2025 அன்றும் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answer) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in-ல் 25.11.2025 அன்று Objection Tracker உடன் வெளியிடப்பட்டது.

தற்காலிக விடைக்குறிப்பிற்கு 25.11.2025 முதல் 03.12.2025 பிற்பகல் 5.00 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபணைகளை (Objections) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்காண் தேதிகளில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபணைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குப்பின் பாட வல்லுநர்கள் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வு எழுதிய தேர்வர்களது OMR விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டன.

ADVERTISEMENT

அரசாணை (நிலை) எண் 23 பள்ளிக் கல்வித் (TRB) துறை, நாள் 28.01.2026 ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தகுதிபெற்ற தேர்வர்களுக்கு 02.02.2026 பி.ப முதல் அவர்களது தகுதிச்சான்றிதழ் (e-certificate) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share