“டெஸ்ட்” படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பின்னணி பாடகி!

Published On:

| By Selvam

சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா நடிக்கும் டெஸ்ட் திரைப்படத்திற்கு பின்னணி பாடகர் சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘தமிழ்ப் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ உள்ளிட்ட 23 திரைப்படங்களை தயாரித்துள்ள நிறுவனம்  Y NOT ஸ்டுடியோஸ்.

ADVERTISEMENT
test movie music director sakthi sri gopalan

இந்நிறுவனத்தின் தலைவர் எஸ்.சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘டெஸ்ட்’. நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். டெஸ்ட் படம் விளையாட்டை மைய கருவாக கொண்ட படம் என கூறப்படுகிறது.

சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் சக்தி ஸ்ரீகோபாலன் இசையமைக்க உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ராமானுஜம்

ADVERTISEMENT

அதிபர் மாளிகை தாக்குதல்: பதிலடி கொடுத்த ரஷ்யா!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share