நாக்பூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி குறைந்தபட்சம் 3 வெற்றிகளையாவது பெற வேண்டும்.
இந்நிலையில், பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிகபட்சமாக அடித்த டாப் 5 ஸ்கோர் குறித்து தற்போது பார்க்கலாம்.
விவிஎஸ் லட்சுமணன்
தனி ஆளாக நின்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல போட்டிகளை வென்று கொடுத்த விவிஎஸ் லட்சுமணன் . அந்த அணிக்கு எதிராக 281 ரன்களை விளாசியதே இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

சச்சின் டெண்டுல்கர்
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். 2002 -2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் முழுவதும் சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து சொதப்பி வந்தார். ஆனால், அந்த தொடரின் கடைசி டெஸ்டில் சச்சின் 241 ரன்களை விளாசினார்.

ராகுல் டிராவிட்
இந்த பட்டியலில் 3 வது இடத்தை பிடித்திருப்பது தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான். 2002 ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராகுல் டிராவிட் 233 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றியை இந்தியா தடுத்து நிறுத்தியது. டிராவிட்டின் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அது பார்க்கப்படுகிறது.

எம்.எஸ்.தோனி
இந்த பட்டியலில் 4 வது இடத்தில் இருப்பவர் தோனி. சென்னையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது தோனி மட்டும் அபாரமாக விளையாடி 224 ரன்களை விளாசினார். இன்று வரை பார்டர் கவாஸ்கர் தொடரில் தனிநபர் அதிக ஸ்கோர் அடித்த இந்திய கேப்டன் மற்றும் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனை தோனிக்கு மட்டும் தான் உள்ளது.

சச்சின் டெண்டுல்கர்
இந்த லிஸ்டில் 5 வது இடத்தில் இருப்பது சச்சின் டெண்டுல்கர். ஆஸ்திரேலிய அணி 2010ஆம் ஆண்டு இந்தியா வந்த போது பெங்களூருவில் நடந்த டெஸ்டில் சச்சின் 214 ரன்களை விளாசினார். இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தமிழ் மகன் உசேனின் கடிதத்தை புறக்கணித்த பன்னீர் தரப்பு!
பேனா சின்னம்.. காழ்ப்புணர்ச்சி.. அரபிக்கடலில் சிவாஜி நினைவிடம் சரியா? கே.எஸ்.அழகிரி
கோலி – ரோகித் இடையேயான விரிசல் உண்மை தான்: பின்னணியை பகிர்ந்த ஸ்ரீதர்