பயங்கரவாதத்தின் ‘காட் ஃபாதர்’ பாகிஸ்தானின் விமான படை தளங்களும் இந்தியாவால் அழிக்கப்பட்டன: பிரதமர் மோடி

Published On:

| By Minnambalam Desk

பயங்கரவாதத்தின் ‘காட் ஃபாதராக’ இருக்கும் பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை மட்டும் அல்ல.. அந்நாட்டின் விமானப் படை தளங்களையும் இந்திய ராணுவம் தாக்கி அழித்துவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமான படை தளத்தில் Operation Sindoor ராணுவ நடவடிக்கையில் பங்கேற்ற வீரர்களைப் பாராட்டி பிரதமர் மோடி பேசியதாவது: ஒவ்வொரு இந்தியரையும் நீங்கள் பெருமிதப்படை வைத்துள்ளீர்கள். இன்று இந்தியா தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணம் நீங்கள்தான். புதிய வரலாற்றைப் படைத்தவர்கள் நீங்கள். உங்களுக்கு உரிய மரியாதை செலுத்தவே நான் இங்கே வந்துள்ளேன்.

நீங்கள் தீரமிக்க போர் வீரர்கள்; நீங்கள்தான் இந்தியாவின் வருங்கால தலைமுறைக்கு ஊக்கமளிப்பவர்கள். பாகிஸ்தானில் நாம் தீவிரவாத முகாம்களை மட்டும் அழித்துவிடவில்லை. பாகிஸ்தானின் விமானப் படை தளங்களையும் அழித்தோம்.

பயங்கரவாதத்தின் காட் ஃபாதராக இருக்கும் பாகிஸ்தானுக்கு இப்போது புரிந்திருக்கும். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் ‘லட்சுமண ரேகை’ எது என்பது இப்போது தெரிந்திருக்கும். இந்திய மண்ணில் இன்னொரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால் இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும்.

இந்தியா இப்போது மூன்று முக்கிய நிலைப்பாடுகளை எடுத்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தினால் பதிலடி நிச்சயம் தரப்படும்; எந்த ஒரு அணு ஆயுத மிரட்டலுக்கும் இந்தியா பயப்படாது; பயங்கரவாதிகளையும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கத்தையும் இந்தியா பிரித்துப் பார்க்காது என்பதுதான் அந்த நிலைப்பாடுகள். இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை உலக நாடுகளும் புரிந்திருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் முழு உரை:

LIVE : PM Modi's interaction with air warriors and soldiers at AFS Adampur
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share