நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள காந்தாரி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஹன்சிகா. விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு இவருக்கு ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னும் பிஸியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. மை 3 வெப் என்ற வெப் தொடரிலும் நடித்து இருந்தார்.
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 2 படத்தில் பேயாக நடித்திருந்த ஹன்சிகா, தொடர்ந்து கார்டியன் படத்திலும் பேயாக நடித்திருந்தார்.
இதற்கிடையே மை நேம் இஸ் ஷ்ருதி, 105 மினிட்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது ஹன்சிகா காந்தாரி படத்தில் நடித்துள்ளார்.
ஆர் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில், மெட்ரோ சிரிஷ் மைல் சாமி, ஸ்டண்ட் சில்வா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரெய்லர் இன்று (ஜூலை 12) வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் முழுவதும் டயலாக் இல்லாமல்… கடைசியில் ஹன்சிகா, ‘இது நான் காவல் காக்குற இடம். இங்க யாருக்கும் அனுமதி இல்ல’ என தெலுங்கில் சொல்கிறார்.
பிளாக் மேக்கப்பில் ஹன்சிகா மிரட்டியுள்ள இப்படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வெளிநாட்டு நிதி… சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சீமான்: கீதா ஜீவன் குற்றச்சாட்டு!
ஆம்ஸ்ட்ராங் கொலை: பாஜக மீது சந்தேகத்தை கிளப்பும் திருமா… ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை!