நெல்லை: அமித்ஷாவுக்கு எதிரான திமுக போஸ்டர்களால் பரபரப்பு!

Published On:

| By Mathi

Nellai Amit Shah

திருநெல்வேலிக்கு (நெல்லை Nellai) வருகை தரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலிக்கு இன்று வருகை தரும் மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார். பின்னர் பாஜகவின் பூத் முகவர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

ADVERTISEMENT

அமித்ஷாவின் நெல்லை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லை மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் திருநெல்வேலி மாநகரம் முழுவதும் அமித்ஷாவுக்கு எதிராக திமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

ADVERTISEMENT

திமுகவின் நெல்லை மத்திய மாவட்ட, தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக, “மறக்கமாட்டோம்! மறக்கவே மாட்டோம்” என்ற தலைப்பில், “ஒடிஷாவை ஒரு தமிழர் ஆளலாமா? ஒடியா பேசக்கூடியவர்தான் ஆள வேண்டும்”- ஒடிஷா தேர்தல் பரப்புரையின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு” என எழுதப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாநகரில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share