ADVERTISEMENT

தென்காசி சங்கரநாராயணர் கோவிலில் அரசு வேலை… 8ஆவது படிச்சிருந்தா போதும்! நிரந்தரப் பணிக்கு உடனே முந்துங்கள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

tenkasi sankaranarayana swamy temple recruitment 2026 watchman job vacancy

“சாமி சந்நிதியில வேலை பார்க்கிறதுங்கிறது ஒரு பாக்கியம்… அதுவே நிரந்தர அரசாங்க வேலையா அமைஞ்சா டபுள் ஜாக்பாட் தானே?” தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அப்படியொரு சூப்பர் வாய்ப்பு இப்போது தேடி வந்திருக்கிறது.

பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் சுவாமி திருக்கோயிலில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

“உள்ளூர்லயே வேலை வேணும், அதுவும் பாதுகாப்பான கவர்மெண்ட் வேலை வேணும்”னு நினைக்கிறவங்க மிஸ் பண்ணக்கூடாத சான்ஸ் இது!

என்ன வேலை? கோவிலின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ‘காவலர்’ (Watchman) மற்றும் ‘துப்புரவுப் பணியாளர்’ உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தற்காலிக வேலை இல்லை, முறையான சம்பள விகிதத்துடன் கூடிய பணி.

ADVERTISEMENT

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • கல்வித் தகுதி: பெரிய படிப்பு எல்லாம் தேவையில்லை. தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருந்தாலே போதும்! (சில பணியிடங்களுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி கேட்டிருக்கலாம்).
  • வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். (இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு உண்டு).
  • நிபந்தனை: விண்ணப்பதாரர் கண்டிப்பாக இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இறை நம்பிக்கை அவசியம்.

சம்பளம் எவ்வளவு? “கோவில் வேலைதானேனு சாதாரணமா நினைக்காதீங்க!” இந்தக் காவலர் பணிக்குத் தமிழக அரசின் ஊதிய விகிதப்படி (Pay Matrix Level) சம்பளம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

அடிப்படைச் சம்பளம் ரூ.15,900-ல் தொடங்கி, அனுபவத்தைப் பொறுத்து ரூ.50,400 வரை உயரும் வாய்ப்பு உள்ளது. இதுபோகப் படிகளும் உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் அப்ளிகேஷன் கிடையாது. ஆஃப்லைன் முறைதான். கோவில் அலுவலகத்திலோ அல்லது இணையதளத்திலோ விண்ணப்பத்தைப் பெற வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ், ஆதார், சாதிச் சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை,

“துணை ஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு சங்கரநாராயணர் சுவாமி திருக்கோயில்,

சங்கரன்கோவில் – 627 756″

என்ற முகவரிக்குத் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம்.

பொதுவா இந்த மாதிரி கோவில் வேலைகளுக்கு, உள்ளூர்ல இருக்குறவங்களுக்குத் தான் முதல் முன்னுரிமை கொடுப்பாங்க. சங்கரன்கோவில் மற்றும் தென்காசி சுற்றுவட்டாரத்துல இருக்குற இளைஞர்கள், குறிப்பா பெரிய படிப்பு படிக்காதவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

இன்டர்வியூல உங்க பக்தி ஈடுபாட்டையும், நேர்மையையும் காட்டுங்க… வேலை நிச்சயம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share