தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் சாலைகளில், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களின் கொடி கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளந்திரையன் கடந்த ஜனவரி 27ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் உத்தரவை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக சி.பி.ஐ.எம் கட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று (ஆகஸ்ட் 25) விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது.









