கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம்!

Published On:

| By Monisha

temple tower at kalaigner memorial

இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம் அமைத்து அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று சட்டமன்றத்தில் சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

அதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் “தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை” என்று கோயில் கோபுரம் வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

இதனையடுத்து சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

மோனிஷா

ADVERTISEMENT

கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: அதிமுக வேட்பாளரை அறிவித்த எடப்பாடி

தங்கம் விலை திடீர் உயர்வு: இன்றைய நிலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share