மழைக்கு ரெஸ்ட்… மீண்டும் கொளுத்தப்போகும் வெயில்: வானிலை மையம் அப்டேட்!

Published On:

| By indhu

Temperatures will rise gradually in Tamil Nadu - Meteorological Centre

தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 26) தெரிவித்துள்ளது.

இதுத்தொடர்பாக, தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில்,

“ தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 26) முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு

இன்று முதல் மே 30ஆம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 டிகிரி செல்சியஸ் அளவில் படிப்படியாக உயரக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பாகவும் அல்லது இயல்பை விட சற்று குறைவாகவும் இருக்கக்கூடும்.

நாளை (மே 27) அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் வானிலை முன்னறிவிப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று இன்று (மே 26) மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை (மே 27) தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

வங்கக்கடல் பகுதிகள்:

இன்று (மே 26) நண்பகல் வரை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 80-90 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 100 கி.மீ. வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் குறைந்து நாளை காலை வரை மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 90-100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ. வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் உயர்ந்து, மணிக்கு 100-120 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 135 கி.மீ. வேகத்திலும், இன்று நள்ளிரவு வரை வீசக்கூடும்.

தொடர்ந்து, காற்றின் வேகம் குறைந்து நாளை காலை வரை, மணிக்கு 70-80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும், நாளை மாலை வரை மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று இன்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேல் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார்: கொளத்தூர் மணி கடிதம்!

மதுரை: பரோட்டா மாஸ்டர் ஆவதற்கு கோச்சிங் கிளாஸா? என்னமா யோசிக்கிறாங்க..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share