தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Temperatures will increase for two days
தமிழகத்தில் மீண்டும் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 39.6° செல்சியல் வெயிலும் குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 22.0° செல்சியல் வெயிலும் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன் 5) வெளியிட்ட அறிவிப்பில், “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் ஜூன் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
05-06-2025 முதல் 06-06-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும்.
05-06-2025 மற்றும் 06-06-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்
05-06-2025 மற்றும் 06-06-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Temperatures will increase for two days