இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் : வானிலை மையம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த சில தினங்களாக மீண்டும் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 40.5° செல்சியல் வெயிலும், குறைந்தபட்சமாக கரூர் பரமத்தி சமவெளி பகுதியில் 21.5 ° செல்சியல் வெயிலும் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஆகஸ்ட் 30) வெளியிட்ட அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 30-08-2025 முதல் 01-09-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

02-09-2025 முதல் 05-09-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

30-08-2025 மற்றும் 31-08-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

ADVERTISEMENT

30-08-2025 மற்றும் 31-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்
காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share