ADVERTISEMENT

மீண்டும் அதிகரிக்கும் வெப்பநிலை: வானிலை அப்டேட்

Published On:

| By Kavi

Temperatures to rise again

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Temperatures to rise again

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று திடீரென மழை பெய்ததால் குளிர்ந்த வானிலை நிலவியது. அதிகபட்சமாக சென்னை மேடவாக்கத்தில் 16 செமீ மழை பெய்தது. கொரட்டூரில் 1செமீ மழை பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT

வெப்பநிலையை பொறுத்தவரை மதுரை விமான நிலையத்தில் 38.8°  செல்சியல்  வெயில் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக  கரூர் பரமத்தியில் 21.0°  செல்சியல் வெளியில் பதிவாகியுள்ளது. 

இந்தநிலையில் மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று (ஏப்ரல் 17) வெளியிட்ட அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக வரும் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

17-04-2025 முதல் 19-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
20-04-2025 மற்றும் 21-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. Temperatures to rise again

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Temperatures to rise again

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share