கேப்டன் மில்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் D 50 படம் வெளியாக போகிறது. இந்த படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் அவர் இயக்கி வருகிறார். இதற்கிடையில் தனுஷின் 51 வது படத்தின் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. D 51 படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார்.
ஏற்கனவே தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. தற்போது D 51 படத்தையும் ஒரு தெலுங்கு இயக்குனர் இயக்குவதால் தனுஷ் மீண்டும் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் படம் கொடுப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது 3 வது முறையாக அடுத்து ஒரு தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் தனுஷ் நடிக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
விரட்ட பர்வம் என்ற தெலுங்கு படத்தை இயக்கிய வேணு உடுகுலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முகமது ஜூபேருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது!
‘கோவாவுக்கு பதிலாக அயோத்திக்கு தேனிலவு’ – விவாகரத்து கோரிய இளம்பெண்!
