அரசுப் பள்ளி சத்துணவில் புழுக்கள்: 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Published On:

| By Selvam

தெலங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில்  மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்துள்ளது.  அதைச் சாப்பிட்ட 30 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டத்தில் மாகனூர் ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று (நவம்பர் 21) வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுவலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. அவர்களை பள்ளி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர் ஒருவர், “எங்களுக்கு உப்புமா வழங்கப்பட்டது, நாங்கள் அதை சாப்பிட்டோம். பின்னர், உணவில் புழுக்கள் இருப்பதாக பள்ளி ஊழியர்களிடம் கூறினோம், அவர்கள் அதை தூக்கி எறிந்தனர்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நான்கு மாணவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாக மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததோடு, சிறந்த சிகிச்சை அளிக்கவும் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பணியில் அலட்சியமாக இருப்பவர்களை உடனடியாக இடைநீக்கம் செய்வது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்க நாராயண்பேட் மாவட்ட ஆட்சியருக்கு ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டார். இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என எச்சரித்த அவர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பட்டாபிராமில் முதல்வர் திறந்து வைக்கும் டைடல் பார்க்: சிறப்புகள் என்னென்ன?

கடலூரில் உதயநிதியை முற்றுகையிடுவோம்: மீனவர் வாழ்வுரிமை இயக்கம் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share