தேஜஸ்வி யாதவுடன் காரில் பயணித்த ராகுல்… வைரலாகும் புகைப்படம்!

Published On:

| By Selvam

Tejashwi yadav joins hands with rahul gandhi

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் நியாய யாத்திரையில் பிகார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இன்று (பிப்ரவரி 16) கலந்துகொண்டார்.

ராகுல் காந்தியின் இரண்டாவது கட்ட நடைபயணத்திற்கு நியாய யாத்திரை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி, மணிப்பூரில் ராகுல் காந்தி தனது நியாய யாத்திரையை துவங்கினார்.

ஜனவரி 29-ஆம் தேதி ராகுல் காந்தி யாத்திரை பிகாருக்குள் நுழைந்தது. அதற்கு முந்தைய நாளான ஜனவரி 28-ஆம் தேதி பிகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறினார். கடந்த இரண்டு வாரங்களாக ராகுல் காந்தி பிகாரில் நடைபயணம் மேற்கொண்டு வந்தார்.

இந்தநிலையில், ராகுல் காந்தி மேற்கொண்ட நியாய யாத்திரையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று கலந்து கொண்டார்.

தேஜஸ்வி யாதவ் வாகனத்தை இயக்க, ராகுல் காந்தி அதில் அமர்ந்து பயணம் செய்தார். இந்த புகைப்படத்தை தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்று மதியம் விவசாயிகளுடன் ராகுல் காந்தி உரையாடுகிறார். பிகாரில் தனது நடைபயணத்தை முடித்துவிட்டு, மாலை ராகுல் காந்தி தனது நடைபயணத்தை உத்தரபிரதேசத்தில் தொடங்க உள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திடீரென உயர்ந்த தங்கம்… காரணம் என்ன?

வார விடுமுறை: சென்னையில் இன்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share