சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
இதுத் தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “அவசரகால பராமரிப்பு பணி காரணமாக பச்சை வழித்தடத்தில் நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், மற்றும் விமான நிலையம் இடையே செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்றைய தினம் (மே 15) ரத்து செய்யப்பட்டுள்ளன.
பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் பயணிகள், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் மாறி செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நீல வழித்தடத்தில் (விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரை) மற்றும் பச்சை வழித்தடத்தில் (புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை) மெட்ரோ இரயில் சேவைகள் வார நாட்கள் அட்டவணைப்படி வழக்கம் போல் இயக்கப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது.
அதில், ” சென்னை மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் சரி செய்யப்பட்டது.
புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரயில்கள் பசுமை வழித்தடத்தில் மீண்டும் தொடங்கப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெண் காவலர்கள் பாதுகாப்பில் திருச்சி அழைத்துச் செல்லப்படும் சவுக்கு சங்கர்