“பார்மசி, சயின்ஸ் படிச்சிருக்கீங்களா? பெரிய சம்பளத்துல மத்திய அரசு வேலைக்காக வெயிட் பண்றீங்களா?” இதோ உங்களுக்கான சூப்பர் அப்டேட்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ், லக்னோவை மையமாகக் கொண்டு இயங்கும் ‘மத்திய மருந்து ஆராய்ச்சி நிலையம்’ (Central Drug Research Institute – CDRI) தற்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு (Advertisement No. 11/2025) வெளியாகியுள்ளது.
என்னென்ன வேலைகள்?
மொத்தம் இரண்டு பிரிவுகளில் ஆட்கள் எடுக்கப்படுகிறார்கள்.
- டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (Technical Assistant): இது கொஞ்சம் உயர் பதவி. இதில் மொத்தம் 12 இடங்கள் காலியாக உள்ளன. (இட ஒதுக்கீடு: பொது-2, ஒபிசி-5, எஸ்டி-2, EWS-1, மாற்றுத்திறனாளிகள்-2).
- டெக்னீசியன்-1 (Technician-1): இதில் 32 பணியிடங்கள் உள்ளன. (இட ஒதுக்கீடு: பொது-9, எஸ்சி-7, ஒபிசி-12, EWS-2, முன்னாள் ராணுவத்தினர்-2).
சம்பளம் எவ்வளவு?
மத்திய அரசு வேலைன்னாலே சம்பளம் சும்மா ‘ஜம்’முனு இருக்கும்,
- டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: மாதம் சுமார் ரூ.67,530 வரை சம்பளம் கிடைக்கும். (Level-6 ஊதியம்).
- டெக்னீசியன்: மாதம் சுமார் ரூ.36,918 வரை கிடைக்கும். (Level-2 ஊதியம்).
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- டெக்னீசியன் பணிக்கு: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ (ITI) சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
- டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு: பி.எஸ்சி (B.Sc) அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் (Diploma) முடித்திருக்க வேண்டும். (குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை அறிவிப்பில் சரிபார்க்கவும்).
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு).
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- www.cdri.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- அங்குள்ள ‘Career’ பகுதியில் ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 26, 2025 (மாலை 5 மணிக்குள்).
மருந்துத் துறை (Pharma Sector) இப்போது மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. சிடிஆர்ஐ (CDRI) போன்ற இந்தியாவின் முதன்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை கிடைப்பது, உங்கள் கேரியருக்குப் பெரிய மைல்கல். சம்பளமும் அதிகம், வேலையும் நிரந்தரம். தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!. கடைசி தேதி நெருங்கிடுச்சு… இன்னும் 4 நாள்தான் இருக்கு. உடனே அப்ளை பண்ணுங்க!
