இந்திய அணிக்கு புதிய சிக்கல்: ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று!

Published On:

| By srinivasan

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி  3-0 என கைப்பற்றியது.

ADVERTISEMENT

இந்தத் தொடரில் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் பயிற்சியாளராக செயல்பட்டார்.

இதனை தொடர்ந்து ஆசிய கோப்பை டி20 2022 தொடர்  வரும் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் துபாய் செல்வார் என எதிர்பார்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Rahul Dravid

 இதனால் ஆசிய கோப்பை 20 ஓவர் தொடரில் பங்கேற்க துபாய் செல்லும் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் செல்லமாட்டார் எனவும் அவருக்கு பதிலாக விவிஎஸ் லக்‌ஷ்மண் பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் எனத் தெரிகிறது.

இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி விளையாடுகின்றன.

தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் விவரம்:

ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான்.

ஆசியக்கோப்பை தொடரின் வர்ணனையாளர் பட்டியல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share